'எனது அடுத்த படம் இவரை வைத்துதான்' - 'ஓ மை கடவுளே' பட டைரக்டர்

தனது அடுத்த படத்தை சிம்புவை வைத்து இயக்க விரும்புவதாக அஸ்வத் மாரிமுத்து தெரிவித்துள்ளார்.;

Update: 2024-04-13 03:26 GMT

சென்னை,

2019 -ம் ஆண்டில் வெளியான 'கோமாளி' படத்தின் மூலம் பிரதீப் ரங்கநாதன் இயக்குனராக அறிமுகமானார். இந்தப்படத்தை தொடர்ந்து பிரதீப் 'லவ் டுடே' படத்தை இயக்கி நடித்தார். இந்த படம் மிகப்பெரிய ஹிட்டானது. இதையடுத்து பிரதீப் ரங்கநாதன் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'எல்ஐசி' படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

இந்த படத்தை தொடர்ந்து ஏஜிஎஸ் தயாரிப்பில் அடுத்த படத்தில் நடிக்க பிரதீப் ஒப்பந்தம் ஆகியுள்ளார். அந்த படத்தை 'ஓ மை கடவுளே' இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்க உள்ளார். இந்த புதிய படத்தின் தலைப்பு விரைவில் வெளியாக உள்ளதாக பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு மே மாதம் தொடங்கவுள்ளது. இந்த திரைப்படம் சம்பந்தமான அறிமுக விடியோவை படக்குழு வெளியிட்டது.

இந்நிலையில், இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து தனது எக்ஸ் தளபக்கத்தில்" அனைத்து சிம்பு சார் ரசிகர்களுக்கும்! சார் என்னை அழைத்து பாராட்டினார். அவருக்காக நான் வித்தியாசமான ஸ்கிரிப்ட் வைத்துள்ளேன் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். எனது அடுத்த படத்தை இவரை வைத்து இயக்க விரும்புகிறேன். அவர் தயாரானதும் அடுத்தக்கட்டத்திற்கு செல்வேன்".  சிலம்பரசனை வைத்து அஸ்வத் மாரிமுத்து இயக்கும் படம் சரியான நேரத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்