ரூ.24 கோடி சொத்து விவகாரம்... நீதிமன்றத்தை நாடிய நடிகர் ஜூனியர் என்டிஆர்?

சொத்து தகராறு தொடர்பாக தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் நடிகர் ஜூனியர் என்டிஆர் மனு தாக்கல் செய்துள்ளார் என்ற தகவல் வெளியானது. ஆனால், அது உண்மையில்லை என்று அவரது தரப்பு மறுத்துள்ளது.

Update: 2024-05-17 15:29 GMT

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான ஜூனியர் என்டிஆர் தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் ஜூப்ளி ஹில்ஸ் ஹவுசிங் சொசைட்டியில் 600 சதுர கெஜத்துக்கு மேல் பிளாட்டின் உரிமையைப் பற்றிய கடன் மீட்பு தீர்ப்பாயத்தின் முடிவை எதிர்த்து ஒரு ரிட் மனு தாக்கல் செய்துள்ளார் என்ற செய்தி இணையத்தில் வைரலானது.

அதாவது, கடந்த 2003ம் ஆண்டு ஜூனியர் என்டிஆர் சுங்கு கீதா என்ற பெண்ணிடம் இருந்து அந்த பிளாட்டை ரூ. 36 லட்சத்திற்கு வாங்கி கட்டிடம் கட்டினார். வாங்கும்போது, அனைத்து அனுமதிகளும் சட்டத்தின்படி பெறப்பட்டன. அதே ஆண்டில், வீடு கட்டும் பணியும் மேற்கொள்ளப்பட்டது. இந்த பிளாட்டின் தற்போதைய மதிப்பு ரூ. 24 கோடி. இந்த இடத்தில்தான் தற்போது தகராறு ஏற்பட்டுள்ளதாக செய்தி வெளியானது.

இந்நிலையில், சொத்து விவகாரத்தில் முந்தைய உரிமையாளரின் உறவினர்கள் போலி ஆவணங்களை உருவாக்கி வங்கிகளில் கடன் பெற்றதாக அவர் குற்றம்சாட்டினார். வங்கிகள் டிஆர்டியை அணுகியதை அடுத்து, சொத்தை கையகப்படுத்துவதற்கான உத்தரவை நீதிமன்றம் வழங்கியது.

ஆனால், இந்த செய்தியை ஜூனியர் என்.டி.ஆர். தரப்பு முற்றிலுமாக மறுத்துள்ளது. அந்த இடத்தை என்டிஆர் கடந்த 2013ம் ஆண்டிலேயே விற்றுவிட்டார் எனவும், அந்த இடத்திற்கும் அவருக்கும் சம்பந்தமில்லை என்றும் சொல்கிறார்கள். அதனால், இந்த விவகாரத்தில் அவர் பெயரை சம்பந்தப்படுத்த வேண்டாம் என்றும் அவர் தரப்பு கேட்டுக் கொண்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்