'கோமாளி' படத்துல ஜிவி பிரகாஷ் நடிச்சிருக்காரா..? - கவனம் ஈர்க்கும் 'அடியே' டிரைலர்

நடிகர் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள 'அடியே' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.

Update: 2023-08-09 12:06 GMT

சென்னை,

ஏண்டா தலையில எண்ண வெக்கல, திட்டம் இரண்டு போன்ற படங்களை இயக்கிய விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள திரைப்படம் 'அடியே'. இந்த படத்தில் வெங்கட் பிரபு, கவுரி, மிர்சி விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மாலி மற்றும் மன்வி மூவி மேக்கர்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றன. இந்த நிலையில் 'அடியே' திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. மல்டிவெர்ஸ் அறிவியல் புனைவு திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்தின் டிரைலரை நடிகர் தனுஷ் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டார். இந்த டிரைலர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.  'அடியே' திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்