வாரிசு நடிகையை வம்புக்கு இழுக்கும் ஆத்மிகா
தமிழ் சினிமாவில் பிரபலங்களின் வாரிசுகளுக்கு கிடைக்கும் வாய்ப்புகள் குறித்து நடிகை ஆத்மிகா மறைமுகமாக சாடியுள்ளார்.;
'மீசையை முறுக்கு', 'கோடியில் ஒருவன்', 'காட்டேரி' போன்ற படங்களில் நடித்தவர் ஆத்மிகா. மாடல் துறையில் இருந்து சினிமாவுக்கு வந்த நடிகைகளில் இவரும் ஒருவர். ஆனாலும் இவருக்கு எதிர்பார்த்த அளவுக்கு படங்கள் அமையவில்லை.
சமீப காலமாக ஆத்மிகா சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்களையே பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் நடந்த 'விருமன்' பட இசை வெளியீட்டு விழா குறித்தும் சில கருத்துக்களை அவர் வெளியிட்டிருந்தார்.
இதற்கிடையில் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார். "சிலருக்கு வாய்ப்புகள் எளிதாக கிடைத்து விடுகிறது. மற்றவர்களின் நிலைமை தான் என்ன? பார்த்துக்கலாம்", என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
'விருமன்' பட கதாநாயகி அதிதியை குறிவைத்துதான் ஆத்மிகா இந்த கருத்தை பதிவிட்டுள்ளதாக திரையுலகினர் கிசுகிசுத்து வருகிறார்கள். அதிதி, டைரக்டர் ஷங்கரின் மகள் ஆவார். 'விருமன்' படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆக இருக்கிறார்.
வாரிசு நடிகையை வம்புக்கு இழுக்கும் அளவுக்கு ஆத்மிகாவுக்கு அப்படி என்ன கோபம்? என ரசிகர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். என்ன பதில் சொல்லப் போகிறார் ஆத்மிகா?