அரசியல் கதையில் தனுஷ்

Update: 2023-08-31 01:07 GMT

தனுஷ் 51-வது படத்தில் நடிக்க தயாராகி உள்ளார். இந்த படத்தை பிரபல தெலுங்கு டைரக்டர் சேகர் கம்முலா டைரக்டு செய்கிறார். பட வேலைகள் தொடங்கி உள்ளன. இதில் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக அறிவித்து உள்ளனர்.

இந்த படம் அரசியல் கதையம்சத்தில் தயாராவதாக தகவல் கசிந்துள்ளது. 1970 மற்றும் 80-களில் நடந்த அரசியலையும் அதில் மாபியா கும்பலுக்கு இருந்த தொடர்புகளையும் பேசும் படமாக உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. நாகார்ஜுனா அரசியல்வாதியாக வருகிறார். தனுஷ் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

தனுஷ் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து முடித்து விட்டு தற்போது தனது 50 படத்தை இயக்கி நடித்து வருகிறார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தை முடித்து விட்டு 51-வது படத்தில் நடிக்க வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்