விவாகரத்து கோரி தனுஷ்-ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நீதிமன்றத்தில் மனு

நடிகர் தனுஷ்-ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கடந்த 2004ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துக் கொண்டனர்.;

Update:2024-04-08 14:30 IST

சென்னை,

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் பரஸ்பரம் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

ரஜினியின் மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்தை நடிகர் தனுஷ் கடந்த 2004ம் ஆண்டு நவம்பர் 18ம் தேதி காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். திருமண வாழ்வில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த சில ஆண்டுகளாக இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், 2004ம் ஆண்டு நடைபெற்ற தங்களின் திருமணத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும் என கோரி இருவரும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர். இதைதொடர்ந்து, நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தாக்கல் செய்த மனுக்கள் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்த நிலையில் விவகாரத்து கோரி மனுதாக்கல் செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்