அதிதி ராவின் முன்னாள் கணவரை மணந்த நடிகை

நடிகை அதிதிராவின் முன்னாள் கணவருக்கு திருமணம் நடந்துள்ளது.

Update: 2023-01-30 08:37 GMT

தமிழில் மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை, செக்கச்சிவந்த வானம் மற்றும் சைக்கோ, ஹேய் சினாமிகா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள அதிதிராவ் ஹைதரி பிரபல இந்தி நடிகர் சத்யதேவ் மிஸ்ராவை திருமணம் செய்து 2013-ல் விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்.

பின்னர் சத்யதேவ் மிஸ்ராவுக்கும், இந்தி நடிகை மசாபா குப்தாவுக்கும் காதல் மலர்ந்தது. மசாபா குப்தா, நடிகை நீனா குப்தாவுக்கும், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் விளையாட்டு வீரர் விவியன் ரிச்சர்ட்ஸ்க்கும் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சத்யதேவ் மிஸ்ராவும், மசாபா குப்தாவும் திருமணம் செய்து கொண்டனர். திருமண புகைப்படங்களை வலைத்தள பக்கத்தில் மசாபா குப்தா பகிர்ந்துள்ளார்.

அதில் வெளியிட்டுள்ள பதிவில், "அமைதியே உருவான சத்யதேவுடன் என் திருமணம் நடந்துள்ளது. அளவு கடந்த அன்பு, சாந்தி, சந்தோஷம் எல்லாம் இங்கேயே இருக்கிறது. இந்த கேப்டனை தேர்ந்தெடுத்துக்கொள்ள அனுமதித்ததற்கு நன்றி. இப்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்'' என்று குறிப்பிட்டு உள்ளார்.

இந்த பதிவை பார்த்த நடிகர், நடிகைகள், ரசிகர்கள் தம்பதிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே இந்தி தயாரிப்பாளர் மது மண்டேனாவை மசாபா திருமணம் செய்து 2019-ல் விவாகரத்து செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்