காதல் திருமணம் செய்த தீபிகா படுகோனே விவாகரத்து?

இந்தி நடிகர் ரன்வீர் சிங்கை தீபிகா படுகோனே காதலித்து திருமணம் செய்து கொண்டார்.;

Update: 2024-05-09 04:21 GMT

காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகர், நடிகைகள் பலர் விவாகரத்து செய்து பிரிந்துள்ளனர். இந்த நிலையில் தீபிகா படுகோனேவும் கணவரை விவாகரத்து செய்ய இருப்பதாக இணையதளங்களில் திடீரென்று தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தி திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் தீபிகா படுகோனே தமிழில் ரஜினிகாந்தின் கோச்சடையான் அனிமேஷன் படத்தில் நடித்து இருந்தார். இந்தி நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் செப்டம்பர் மாதம் தங்கள் குழந்தையை எதிர்பார்ப்பதாக தெரிவித்து கர்ப்பமாக இருப்பதை சில மாதங்களுக்கு முன்பு உறுதிப்படுத்தினர்.

இந்த நிலையில் ரன்வீர் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து தங்களது திருமண புகைப்படங்கள் அனைத்தையும் நீக்கி விட்டார். திருமண புகைப்படங்களை ரன்வீர் சிங் ஏன் நீக்கினார்? விவாகரத்து செய்து பிரியப்போகிறார்களா? என்று பலரும் கேள்வி எழுப்பினர்.

இந்த நிலையில் கர்ப்பமாக இருக்கும் தீபிகா படுகோனே கையை பிடித்தபடி ரன்வீர் சிங் செல்லும் புதிய புகைப்படம் வெளியாகி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்