'கோப்ரா' படத்தின் இசை வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு

கோப்ரா படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்;

Update:2022-07-09 22:05 IST

சென்னை,

இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் 'கோப்ரா'. இந்த படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி, மியா, கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், கே.எஸ்.ரவிக்குமார், ரோஷன் மேத்யூ, பத்மப்ரியா ஜானகிராமன், கனிகா, ஷாஜி சென் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தத் திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ தயாரித்துள்ளது.

'கோப்ரா' திரைப்படம் ஆகஸ்ட் 11-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

இந்த நிலையில் 'கோப்ரா' படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.அதன்படி கோப்ரா படத்தின் இசைவெளியீட்டு விழா வரும் திங்கள்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்