வளைந்து நெளிந்து ஏங்கவைக்கும் ஏஞ்சல் பூஜா ஹெக்டே...! தீப்பற்றி எரியும் இன்ஸ்டா...!

நடிகை பூஜா ஹெக்டே தனது லேட்டஸ்ட் படங்களை இன்ஸ்டகிராமில் பகிர்ந்துள்ளார்.

Update: 2022-12-24 08:28 GMT

சென்னை

தமிழில் மிஷ்கினின் முகமூடி படத்தில் அறிமுகமானார் பூஜா ஹெக்டே. பீஸ்ட் படத்தின் மூலம் பலரின் மனதில் இடம் பிடித்தார்.


இதற்கு நடுவில் தெலுங்கு திரையுலகிலும், இந்தியிலும் சில திரைப்படங்களில் நடித்திருந்தார். தெலுங்கில் அல்லு அர்ஜுனுடன் அல வைகுந்தபுரம்லு திரைப்படத்தில் நடித்து தென்னிந்திய நடிகையாக மாறினார். அதனைத் தொடர்ந்து பிரபாஸுடன் ராதே ஷ்யாம், சிரஞ்சீவியுடன் ஆச்சார்யா உள்ளிட்ட படங்களில் நடித்தார்.



 இதேபோன்று பாலிவுட்டிலும் மொஹஞ்சதாரோ' என்ற படத்தில் ஹிருத்திக் ரோஷனுடன் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து ரன்வீர் சிங் உடன் 'சர்க்கஸ்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனிடையே தமிழில் அஜித் குமார் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற வீரம் திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடிகை பூஜா ஹெக்டே ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் சல்மான் கான் நாயகனாக நடிக்கிறார்.



இன்ஸ்டாகிராமில் பூஜாவின் புகைப்படத்திற்கென்றே தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இந்நிலையில் அவர் பகிர்ந்த புதிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதில் ஒரு ரசிகர், "இன்ஸ்டாகிராமே தீப்பற்றி எரிகிறது" என கமெண்ட் செய்துள்ளார். ஆமாம் இந்த புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது. 



 


Tags:    

மேலும் செய்திகள்