இரும்புப் பெட்டிகளைப் போலவே இடிபாடுகளுக்குள் சிக்கி இதயக்கூடும் நொறுங்கிவிட்டது - வைரமுத்து வேதனை
இரும்புப் பெட்டிகளைப் போலவே இடிபாடுகளுக்குள் சிக்கி இதயக்கூடும் நொறுங்கிவிட்டது என்று வைரமுத்து வேதனை தெரிவித்துள்ளார்.
சென்னை,
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் பெங்களூரு, சென்னை ரெயில்கள் உள்பட 3 ரெயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின. இதுவரை வெளியாகி இருக்கும் தகவலின்படி, இந்த விபத்தில் 288 பயணிகள் உயிரிழந்துள்ளதாகவும், 900 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் "இரும்புப் பெட்டிகளைப் போலவே இடிபாடுகளுக்குள் சிக்கி இதயக்கூடும் நொறுங்கிவிட்டது" என்று விபத்து குறித்து கவிஞர் வைரமுத்து வேதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,
"இரும்புப் பெட்டிகளைப் போலவே
இடிபாடுகளுக்குள் சிக்கி
இதயக்கூடும் நொறுங்கிவிட்டது
பாதிக்கப்பட்ட
ஒவ்வொரு குடும்பத்திற்கும்
ஆழ்ந்த இரங்கல்
மீட்புப் பணியாளர்க்குத்
தலைதாழ்ந்த வணக்கம்
இருந்த இடத்தில்
எழுந்து நின்று மௌனமாய் அஞ்சலிக்கிறேன்
கண்ணீர்
கன்னம் தாண்டுகிறது" என்று கூறியுள்ளார்.