'கவர்ச்சி உடை அணிய சொன்னதால்...'- நடிகை மம்தா வருத்தம்

இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் கடந்த 2007ம் ஆண்டு வெளியான ’யமடோங்கா’ படத்தில் நடிகை மம்தா மோகன்தாஸ் நடித்திருந்தார்.;

Update: 2024-06-16 05:04 GMT

சென்னை,

மலையாள சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் மம்தா மோகன்தாஸ். மலையாளம் மட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார். நடிப்பு மட்டுமின்றி, பாடல்களும் பாடியுள்ளார். தமிழில் 2006-ல் வெளியான சிவப்பதிகாரம் படத்தில் விஷால் ஜோடியாக நடித்து அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து குசேலன், குரு என் ஆளு, தடையற தாக்க உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

கடைசியாக 3 வருடங்களுக்கு முன்பு வெளியான 'எனிமி' படத்தில் நடித்து இருந்தார். தற்போது, நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய் சேதுபதியுடன் மகாராஜா படத்தில் நடித்து இருக்கிறார். இப்படம் கடந்த 13-ம் தேதி வெளியாகி வெற்றிநடை போட்டுவருகிறது.

தெலுங்கில், இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் கடந்த 2007ம் ஆண்டு வெளியான 'யமடோங்கா' படத்தில் நடிகை மம்தா மோகன்தாஸ் நடித்திருந்தார். தற்போது அந்த நினைவுகளை பகிர்ந்து கொண்டுள்ளார். அது குறித்து அவர் பேசியதாவது,

'யமடோங்கா படத்தின் செட்டில் கிட்டத்தட்ட 200க்கும் அதிகமான நபர்கள் இருந்தார்கள். மலையாள செட்போல் இல்லை. அப்போது கவர்ச்சி உடை அணிய சொன்னார்கள். அது என்னை வருத்தமடைய செய்தது. சினிமா துறையைப் பற்றி கேள்விப்பட்டுதான் இங்கு வந்தேன். இருந்தாலும் சில தருணங்கள் இப்படி அமைந்து விடுகின்றன' இவ்வாறு கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்