இன்ஸ்டாகிராமில் விளம்பரம் பதிவிட ரூ.3 கோடி வசூலிக்கும் விஜய் பட நடிகை
தமிழில் விஜய் ஜோடியாக ‘தமிழன்' படத்தில் அறிமுகமான பிரியங்கா சோப்ரா, பின்னர் இந்தி படங்களில் நடித்து பாலிவுட்டின் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார்.;
ஹாலிவுட் பாப் பாடகர் நிக் ஜோனசை காதலித்து திருமணம் செய்த பிறகு, தற்போது அமெரிக்காவில் சொகுசு வாழ்க்கையில் திளைத்துக் கொண்டு இருக்கிறார். தற்போது ஹாலிவுட் படங்களில் நடித்து கொண்டும் இருக்கிறார். அதேவேளை விலை உயர்ந்த பங்களா, சுற்றுலா தலங்களுக்கு பயணம், விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள் அணிவது என்று ஆடம்பரமாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இன்ஸ்டாகிராம் சமூக வலைதள பக்கத்தில் 8 கோடிக்கும் மேற்பட்ட ரசிகர்களை கொண்டிருக்கும் பிரியங்கா சோப்ரா, அதில் விளம்பரங்களை பதிவிட ரூ.3 கோடி வரை பணம் பெறுகிறாராம். சமீபத்தில் ஒரு நிறுவனத்தின் விளம்பரத்தை அத்தகைய தொகையை பெற்றபின்னர் தான் வெளியிட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இதனால் இன்ஸ்டாகிராமில் விளம்பரத்தை பதிவிட அதிக கட்டணம் வசூலிக்கும் நடிகையாக மாறி போயிருக்கிறார், பிரியங்கா சோப்ரா.