'நான் யார்'?- 'பிளடி பெக்கர்' படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதி அறிவிப்பு
கவின் நடித்துள்ள 'பிளடி பெக்கர்' படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.;
சென்னை,
கவின் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பிளடி பெக்கர்' . இயக்குனர் நெல்சன் திலீப் குமார் தயாரித்துள்ள இப்படத்தை அறிமுக இயக்குனரான சிவபாலன் முத்துகுமார் இயக்கியுள்ளார். இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'நான் யார்'?? என்ற இப்படத்தின் முதல் பாடல் நாளை மறுநாள் மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளது.
இப்படம் அடுத்த மாதம் 31-ம் தேதி தீபாவளிக்கு வெளியாக உள்ளது. தீபாவளியன்று பல முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாக உள்ளன. அதன்படி, ஜெயம் ரவி நடித்துள்ள பிரதர், சிவகார்த்திகேயனின் அமரன், துல்கர் சல்மான் நடித்துள்ள லக்கி பாஸ்கர் உள்ளிட்ட படங்கள் வெளியாக உள்ளன. இதன்மூலம் இந்த தீபாவளி சினிமா ரசிகர்களுக்கு விருந்தாக அமைய உள்ளது.