ரத்தம் தெறிக்கும் வன்முறை : தடம் மாறிய தமிழ் சினிமா

ஆயிரம் மேடைகள் போட்டு சமூகத்துகான கருத்துக்களைச் சொல்லும் வேலையை ஒரே ஒரு திரைப்படம் செய்து விடும் என்பது உண்மை. சினிமாவைப் பார்த்து திருந்தியவர்களும் உண்டு; கெட்டவர்களும் உண்டு.

Update: 2023-10-13 01:49 GMT

பாகவதர் காலத்தில் சினிமா என்பது சங்கீத மேடைகள் போல் படம் முழுவதும் பாடல்கள் நிறைந்திருந்தன. அதன் பிறகு குடும்ப உறவுகள், திருடன் - போலீஸ் கதை, உறவு களுக்கு மத்தியில் உள்ள சிக்கல்கள், அதற்கான தீர்வுகள், காதல், அண்ணன் - தங்கை பாசம், பெற்றோருக்கும், பிள்ளைகளுக்குமிடையே உள்ள சென்டிமென்ட், காதல் தோல்வி, சமூகப் பிரச்சினைகள், கணவன்-மனைவி குடும்ப சிக்கல்கள் என பல்வேறு கதைக்களங்களில் திரைப்படங்கள் வெளிவந்தன.

இப்போது நிலைமை மாறியுள்ளது. சமீப காலமாக ரத்தம் தெறிக்கும் சண்டை படங்களே அதிகம் வருகின்றன. முன்பெல்லாம் அனைத்து வயதினரும் கண்டுகளிக்கும் வகையில் `யு' சான்றிதழ் படங்களாக வந்தன. தற்போது முன்னணி கதாநாயகர்களில் இருந்து இளம் நடிகர்கள் வரை அனைத்து படங்களிலும் வன்முறை காட்சிகள் அதிகம் இடம்பெற்ற காரணத்தினால் `யு ஏ' சான்றிதழ்களை பெற்று வருகின்றன.

பெரும்பாலான படங்கள் ரத்தம் தெறிக்கும் சண்டை படங்களாக வருவதற்கு காரணமே, ரசிகர்கள் தங்கள் அபிமான நடிகர் பறந்து பறந்து சண்டை போடுகிறவராகவும், துப்பாக்கி முனையில் பல நூறுபேரை சுட்டு வீழ்த்துகிறவர்களாகவும் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் சண்டை படங்களுக்கு ஆதரவு தருவதுதான்.

இதனால் இயக்குனர்களும், நாயகன் வில்லனை பழிவாங்கும் கதை என்ற போர்வையில் வன்முறை தூக்கலாக இருக்கும் படங்கள் எடுப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

சமீபத்தில் வெளியான ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித்குமார், சூர்யா, விக்ரம், கார்த்தி உள்ளிட்ட அனைத்து முன்னணி நடிகர்களின் படங் களும் அதீத வன்முறை காட்சிகளுடன் வந்தன. அவை வெற்றியும் பெற்றுள்ளன. தமிழ் சினிமா வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வசூல் புரட்சி செய்ததாக விளம்பரப்படுத்தப்பட்ட அத்தனை படங்களும் ரத்தம் தெறிக்கும் படங் களாக வெளிவந்தவை தான்.

ரத்தம் தெறிக்கும் ஆக்ஷன் படங்களோடு மக்களின் வாழ்க்கையை பேசும் படங்களும் அதிகம் வரவேண்டும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்