'காளிதாஸ் 2' படத்தில் பரத் - வெளியான அப்டேட்

கடந்த 2019-ம் ஆண்டு பரத் நடிப்பில் வெளியான திரில்லர் படம் 'காளிதாஸ்'.

Update: 2024-07-06 06:49 GMT

image courtecy:instagram@bharath_niwas

சென்னை,

'பாய்ஸ்' படத்தில் டீன் ஏஜ் இளைஞனாக ஸ்டைலிஷ் ஆங்கிலம் பேசியபடி நடித்து கவனம் ஈர்த்தவர் பரத். 'காதல்' படத்தின் மூலம் மக்களின் கவனத்தை ஈர்த்தவர்.

கடந்த 2019-ம் ஆண்டு பரத் 'காளிதாஸ்' என்ற திரில்லர் படத்தில் நடித்து இருந்தார். போலீஸ் அதிகாரியாக நடித்த அந்தப்படம் மக்களிடையே நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. அந்தப்படத்தினை ஸ்ரீ செந்தில் இயக்கினார். அப்படத்தில் ஆன் ஷீத்தல், சுரேஷ் மேனன் மற்றும் ஆதவ் கண்ணதாசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர்.

தற்போது, ஸ்ரீ செந்தில் இயக்கத்தில் 'காளிதாஸ் 2' படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் நாளை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்க உள்ளார். மேலும், தொழில்நுட்பக் குழுவில் சுரேஷ் பாலா ஒளிப்பதிவும், புவன் சீனிவாசன் படத்தொகுப்பும் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்