மீண்டும் கதாநாயகனாக பாக்யராஜ்

நடிகர் பாக்யராஜ் நீண்ட இடை வெளிக்குப் பிறகு ‘3.6.9’ என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.;

Update: 2022-11-04 04:07 GMT

சினிமா வரலாற்றில் 81 நிமிடங்கள் தொடர்ச்சியாக இத்திரைப்படத்தின் படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளனர். ஒரே நேரத்தில் 24 கேமராக்கள், 150-க்கும் மேற்பட்ட நடிகர் - நடிகைகள். 450 தொழில் நுட்ப கலைஞர்களை வைத்து உருவாகியுள்ளது. இந்தப் படம் உலக சாதனைக்கான விருதையும் பெற்றுள்ளது. படத்தை தயாரிக்கும் பிஜிஎஸ், வில்லனாக நடித்துள்ளார். பிளாக் பாண்டி, அஜய் கண்ணன், சுகைல், சத்தி மகேந்திரா ஆகியோரும் உள்ளனர். கேப்டன் எம்.பி.ஆனந்த் இணை தயாரிப்பில், சிவ மாதவ் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்தப் படத்துக்கு, மாரிஸ்வரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கார்த்திக் ஹர்சா இசையமைத்துள்ளார்.

படம் குறித்து பாக்யராஜ் கூறும்போது, "நான் நல்ல விஷயத்திற்காக எப்போதும் பிடிவாதமாக இருப்பேன். 'ஒரு கைதியின் டைரி' படத்தை இந்தியில் அமிதாப்பச்சனை வைத்து எடுத்தபோது, பிடிவாதமாக நான் எழுதிய கிளைமாக்சை வைத்து படமாக்கி அது வெற்றியும் பெற்றது. யாருமே முழுதாக சினிமாவை கற்றுக்கொண்டு உள்ளே நுழைவதில்லை. இந்தப் படத்தின் இயக்குனர் சிவ மாதவ்வும் இந்தப் படத்தை, தான் நினைத்தபடி மிக நேர்த்தியாக பிடிவாதமாக இருந்து செதுக்கியுள்ளார். அந்த வகையில் நிச்சயம் அனைவராலும் பேசப்படும் ஒரு படமாக இருக்கும்'' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்