'மாற்றம்' அமைப்பின் வங்கிக் கணக்கு பூமியில் இல்லை, சொர்க்கத்தில் இருக்கிறது - எஸ்.ஜே.சூர்யா

'மாற்றம்' அமைப்பின் வங்கிக் கணக்கு பூமியில் இல்லை என்றும், அது சொர்க்கத்தில்தான் இருக்கிறது என்றும் எஸ்.ஜே.சூர்யா தெரிவித்தார்.

Update: 2024-06-18 16:33 GMT

காஞ்சிபுரம்,

நடிகரும், நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸ் 'மாற்றம்' என்ற அமைப்பின் மூலம் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். அந்த வகையில் இன்று 'மாற்றம்' அமைப்பின் மூலம் காஞ்சிபுரத்தை அடுத்த தேனம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிக்கு டிராக்டர் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா கலந்து கொண்டு டிராக்டரை வழங்கினார்.

முன்னதாக இருவருக்கும் மேளதாளம் முழங்க, மலர்களைத் தூவி, சிலம்பாட்டம், மான் கொம்பு ஆட்டத்துடன் கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.ஜே.சூர்யா, "ராகவா லாரன்ஸ் தொடங்கியிருக்கும் 'மாற்றம்' அமைப்பின் வங்கிக் கணக்கு பூமியில் இல்லை, சொர்க்கத்தில் இருக்கிறது. எனவே 'மாற்றம்' அமைப்பின் கஜானாவில் இருந்து யாராவது திருட வேண்டும் என்று நினைத்தால், உயிரை விட்டுவிட்டு சொர்க்கத்திற்கு சென்றால்தான் முடியும்.

நாங்கள் செய்வதைப் பார்த்து மற்றவர்களும் உதவு செய்யத் தொடங்கினால் எங்கள் ஆசை நிறைவேறிவிடும். ஒரு பாடல் பிரபலமாகிவிட்டால் அதை வைத்து 'ரீல்ஸ்' போடுவது போல், கஷ்டப்படும் நபர்களுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்து அதை ராகவா லாரன்சின் சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிடுங்கள். நீங்களும் மாற்றத்தில் இணைந்தால் அவர் மகிழ்ச்சி அடைவார்" என்று தெரிவித்தார்.


Full View

 

Tags:    

மேலும் செய்திகள்