புதிய மைல்கல்லை எட்டிய 'பேட் நியூஸ்' - வசூல் எவ்வளவு தெரியுமா?

'பேட் நியூஸ்' வெளியாகி இரண்டு வாரமான நிலையில் புதிய மைல்கல்லை எட்டி இருக்கிறது.

Update: 2024-08-02 08:31 GMT

சென்னை,

பிரபல பாலிவுட் நடிகர் விக்கி கவுசல். இவர் இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் கத்ரீனா கைப்பின் கணவர் ஆவார். நடிகர் விக்கி கவுசல் தற்போது 'பேட் நியூஸ்' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை, பிரபல இயக்குனர் ஆனந்த் திவாரி இயக்கியுள்ளார்.

இதற்கு முன்னதாக விக்கி கவுசல் நடித்திருந்த 'லவ் பேர் ஸ்கொயர் பீட்' படத்தையும் இவர்தான் இயக்கியிருந்தார். அனிமல் படத்தில் நடித்துள்ள திரிப்தி டிம்ரி 'பேட் நியூஸ்' படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தில் நடிகை நேஹா தூபியாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த நகைச்சுவை படத்தில் விக்கி கவுசல், அமி விர்க் என இரண்டு கதாநாயகர்கள் நடித்துள்ளார்கள். இந்தப் படத்தில் திரிப்தி டிம்ரி இரண்டு ஆண்களால் கர்ப்பமான பெண் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

கடந்த மாதம் 19-ம் தேதி இப்படம் நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. இந்தப்படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் ரூ 8.62 கோடியை ஈட்டியது.

இந்நிலையில் இப்படம், வெளியாகி இரண்டு வாரம் ஆன நிலையில் புதிய மைல்கல்லை எட்டி இருக்கிறது. அதன்படி, இப்படம் உலகம் முழுவதும் ரூ.102 கோடி வசூலித்துள்ளது . இதனை படக்குழு போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்