துபாயில் நடந்த பார்ட்டியில் பாகிஸ்தான் நடிகையுடன் ஷாருக்கான் மகன்..? சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படம்...!
பாகிஸ்தானைச் சேர்ந்த சாடியா கான், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் ஆவார்.
மும்பை,
சொகுசு கப்பலில் போதை பார்ட்டியில் ஷாருக்கான் மகன் ஆர்யான் கான் கலந்து கொண்டதாக அதிரடியாக கைது செய்யப்பட்டது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் அந்த குற்றத்துக்கும் அவருக்கும் சம்மந்தமே இல்லை என்றும் காவல் அதிகாரியின் சூழ்ச்சி தான் என அந்த விசாரணை அதிகாரி மாற்றப்பட்டார்.
இந்நிலையில், பாகிஸ்தான் நடிகையுடன் புத்தாண்டு பார்ட்டியில் ஷாருக்கான் மகன் எடுத்துக் கொண்ட போன்ற புகைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது புரளி என கூறப்படுகிறது.
ஷாருக்கான் நடிப்பில் வரும் ஜனவரி 25ம் தேதி வெளியாக உள்ள பதான் படத்தையும் ரிலீஸ் செய்யக் கூடாது என போராட்டம் வலுக்கும் நிலையில், ஆர்யன்கான் பாகிஸ்தான் நடிகையுடன் இணைந்து பார்ட்டியில் கலந்து கொண்டிருப்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியது.
புத்தாண்டையொட்டி, ஆர்யன் கான் தன் குடும்ப உறுப்பினர்களுடன் துபாயில் நடந்த பார்ட்டியில் கலந்துகொண்டார். அந்த பார்ட்டியில் பாகிஸ்தான் நடிகை சாடியா கானும் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது. அப்போது அவர்கள் இருவரும் ஒன்றாக இருப்பது போன்ற புகைப்படம் சித்தரித்து சமூக வலைதளங்களில் வைரலாகியது. இருவரும் ரசிகருடன் தனித்தனியாக போஸ் கொடுத்தனர். ஆனால், அந்த படங்கள் ஒரே இடத்தில் எடுக்கப்பட்டதுதான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இது போன்ற புகைப்படங்கள் ஒட்டியும் வெட்டியும் சமூக வலைதளங்களில் வைரலாக்கியது.
பாகிஸ்தானைச் சேர்ந்த சாடியா கான், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் ஆவார்.
பாகிஸ்தான் நடிகை சாடியா கான் உடன் ஷாருக்கான் மகன் ஆர்யான் கான் போட்டோ எடுத்துக் கொண்ட நிலையில், இருவரும் காதல் செய்கின்றனரா? என்ற கோணத்திலும் சமூக வலைதளங்களில் பயனார்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
சமீபத்தில் பாலிவுட் நடிகை நோரா பதேஹியுடன் ரொம்ப நெருக்கமாக ன் ஆர்யான் கான் இருக்கும் புகைப்படம் வெளியாகி பெரும் புயலை பாலிவுட்டில் கிளப்பியது. பாகிஸ்தான் நடிகையுடன் ஷாருக்கான் மகன் சுற்றி வருவது சர்ச்சையை கிளப்பி உள்ளது.