'டிமான்ட்டி காலனி 2' படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?

அஜய் ஆர் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடித்துள்ள ‘டிமான்ட்டி காலனி 2’ படம் உலகளவில் ரூ 55 கோடி வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2024-08-29 16:16 GMT

சென்னை,

அருள்நிதி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர். இவர் வம்சம், மௌனகுரு, இரவுக்கு ஆயிரம் கண்கள், டைரி, கழுவேத்தி மூர்க்கன் என பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இதற்கிடையில் கடந்த 2015-ம் ஆண்டு அருள்நிதி, டிமான்ட்டி காலனி எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை அஜய் ஞானமுத்து இயக்கியிருந்தார். ஹாரர் திரில்லர் கதை களத்தில் வெளியான இந்த படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதைத்தொடர்ந்து கிட்டத்தட்ட எட்டு வருடங்கள் கழித்து 'டிமான்ட்டி காலனி ' படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி இருக்கிறது.

அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள 'டிமான்ட்டி காலனி 2' படத்தில் அருள்நிதி தவிர பிரியா பவானி சங்கர், அருண்பாண்டியன், விஜே அர்ச்சனா, மீனாட்சி கோவிந்தராஜன், முத்துக்குமார் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவான டிமான்ட்டி காலனி 2 திரைப்படம் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியானது. ஒருசில கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் முதல் பாகத்தின் தொடர்ச்சியான காட்சிகள், திகில் விஎப்எக்ஸ் என ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. மூன்றாம் பாகத்திற்கான குறிப்போடு முடிவதால், அடுத்த பாகம் உருவாகும் எனத் தெரிகிறது.

படக்குழுவினர் இந்த வெற்றியை சமீபத்தில் கேக் வெட்டிகொண்டாடியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 2-ஆவது வாரத்தில் கூடுதல் திரைகளில் திரையிடப்பட்டு வருகிறது. முதல் வாரத்தில் 275 திரைகளில் வெளியான 'டிமான்ட்டி காலனி 2' திரைப்படம் தற்போது 350க்கும் அதிகமான திரைகளில் திரையிடப்படுகின்றன.

அஜய் ஆர் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடித்துள்ள டிமான்டி காலனி 2 படம் உலகளவில் ரூ 55 கோடி வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கிய கோப்ரா திரைப்படம் தோல்வியைத் தழுவியது. இந்தப் படத்தின் தோல்வி இயக்குநர் அஜய் ஞானமுத்து மீது பல்வேறு விமர்சனங்களுக்கு வழி வகுத்தது. தற்போது 'டிமான்ட்டி காலனி 2' படத்தின் வெற்றி அவர் மீதான விமர்சனங்களுக்கு பதில் சொல்லும் விதமாக அமைந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்