'பத்து தல' பாடலின் ட்ரோல் வீடியோவை மறு உருவாக்கம் செய்த ஏ.ஆர்.ரஹ்மான்!
ட்ரோல் வீடியோவை ஏ.ஆர்.ரஹ்மான், சுபா மற்றும் சினேகன் ஆகியோர் இணைந்து மறு உருவாக்கம் செய்துள்ளனர்.;
சென்னை,
இயக்குனர் ஒபலி என்.கிருஷ்ணா இயக்கிய 'பத்து தல' திரைப்படம் கடந்த மார்ச் 30-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் நடிகர் சிம்பு, கவுதம் மேனன், கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இந்த படத்தில் இடம்பெற்றிருந்த 'நம்ம சத்தம்', 'நீ சிங்கம் தான்', 'ராவடி' உள்ளிட்ட பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. இதில் 'ராவடி' பாடலை ரசிகர்கள் ஜாலியாக ட்ரோல் செய்து வீடியோ வெளியிட்டிருந்தனர். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி இருந்தது.
இந்த நிலையில் அந்த ட்ரோல் வீடியோவை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், பாடகர் சுபா மற்றும் பாடலாசிரியர் சினேகன் ஆகியோர் இணைந்து மறு உருவாக்கம் செய்துள்ளனர். இந்த வீடியோவை படத்தின் இயக்குனர் ஒபலி என்.கிருஷ்ணா தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தனது பாடல் குறித்த ட்ரோல் வீடியோவை ஏ.ஆர்.ரஹ்மான் ஆரோக்கியமான முறையில் எடுத்துக் கொண்டது குறித்து ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.