கல்யாணக் கொண்டாட்டத்தில் 'டாடா' பட நாயகி அபர்ணாதாஸ்

'டாடா’ பட நாயகி அபர்ணாதாஸூக்கு நாளை திருமணம் நடைபெற இருக்கிறது. நலங்கு கொண்டாட்ட புகைப்படங்களை அவர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்ததை அடுத்து, ரசிகர்கள் அவருக்கு திருமண வாழ்த்துகளைச் சொல்லி வருகின்றனர்.;

Update: 2024-04-23 10:21 GMT

விஜய் நடிப்பில் வெளியான 'பீஸ்ட்' படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை அபர்ணாதாஸ். அந்தப் படத்தில் அவருக்கு சிறு கதாபாத்திரம் என்றாலும் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்தார். பின்பு, 'டாடா' படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார் அபர்ணாதாஸ். அவரது அடுத்தப் படம் தமிழில் என்ன என ரசிகர்கள் எதிர்பார்த்திருக்க, ஸ்வீட் சர்ப்ரைஸாக அவரது திருமண செய்தி கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது. 

'மஞ்சுமெல் பாய்ஸ்' படத்தில் நடித்த தீபக் பரம்போல் என்பவரைத்தான் அபர்ணா கரம்பிடிக்கிறார் . அபர்ணாதாஸ்- தீபக் பரம்போல் இருவரும் 'மனோஹரம்' என்ற மலையாளப் படத்தில் இணைந்து நடித்தனர். அப்போது இருவருக்குள்ளும் ஏற்பட்ட நட்பு, காதலாகி இப்போது திருமணம் வரை வந்திருக்கிறது.

தீபக் பரம்போல் வினீத் ஸ்ரீனிவாசனின் 'மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப்' என்ற படம் மூலம் அறிமுகமானார். பின்னர் 'தட்டத்தின் மறையத்து' ,'கண்ணூர் ஸ்குவாட்' சமீபத்தில் வசூலில் சக்கை போடு போட்ட 'மஞ்சுமெல் பாய்ஸ்' உட்பட ஏராளமான ஹிட் படங்களில் நடித்துள்ளார். இவர்களது திருமணம் நாளை கேரளா, வடக்கஞ்சேரியில் நடைபெற உள்ளது.

உறவினர்கள், நண்பர்கள், திரையுலகில் இந்த ஜோடிக்கு நெருக்கமானவர்கள் மட்டும் இந்தத் திருமணத்தில் கலந்து கொள்வார்கள் எனத் தெரிகிறது. திருமணத்திற்கு முன்பு நலங்கு கொண்டாட்டங்கள் களைக்கட்டி இருக்கிறது. இந்தப் புகைப்படங்களை அபர்ணாதாஸ் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள் அவருக்கு திருமண வாழ்த்துகளைச் சொல்லி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்