காதல் வதந்திக்கு நடிகை விளக்கம்
தெலுங்கு நடிகர் அல்லு சிரிசும் அனு இம்மானுவேலும் காதலிப்பதாக தெலுங்கு இணையதளங்களில் தகவல் பரவியது.;
தமிழில் விஷாலின் துப்பறிவாளன் படத்தில் நடித்து பிரபலமானவர் அனு இம்மானுவேல். தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் நம்ம வீட்டு பிள்ளை படத்திலும் நடித்து இருந்தார். தெலுங்கில் அதிக படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். தற்போது அனு இம்மானுவேலுக்கு 26 வயது ஆகிறது.
இந்த நிலையில் தெலுங்கு நடிகர் அல்லு சிரிசும் அனு இம்மானுவேலும் காதலிப்பதாக தெலுங்கு இணையதளங்களில் தகவல் பரவியது. இருவரும் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்வதாகவும் சிலர் பேசினர். இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு இருப்பதாகவும் கிசுகிசுக்கப்பட்டது. இதற்கு இருவருமே பதில் சொல்லாமல் இருந்ததால் காதலிப்பது உறுதிதான் என்றும் பேசினர்.
இந்த நிலையில் காதல் கிசுகிசுவுக்கு தற்போது அனு இம்மானுவேல் பதில் அளித்துள்ளார். அவர் கூறும்போது, ''நான் யாரையும் காதலிக்கவில்லை. சேர்ந்து வாழவும் இல்லை. எனக்கு இப்போது திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை'' என்றார்.