அஞ்சலி நடித்துள்ள 'ஃபால்' வெப் தொடரின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது
நடிகை அஞ்சலி நடித்துள்ள 'ஃபால்' வெப் தொடரின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.;
சென்னை,
நடிகை அஞ்சலி தற்போது இயக்குனர் சித்தார்த் ராமசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஃபால்' (Fall) வெப் தொடரில் நடித்துள்ளார். இந்த தொடர் "வெர்டிஜ்" எனும் கனடிய வெப் தொடரின் ரீமேக்காகும். இதில், எஸ்பிபி சரண், சோனியா அகர்வால், சந்தோஷ் பிரதாப், நமிதா கிருஷ்ணமூர்த்தி, தலைவாசல் விஜய் மற்றும் பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த தொடருக்கு அஜேஷ் இசையமைத்துள்ளார். கிஷன் சி செழியன் படத்தொகுப்பு செய்கிறார். இத்தொடரை இயக்குவது மட்டுமல்லாமல் இதற்கு ஒளிப்பதிவும் இயக்குனர் சித்தார்த் ராமசாமி செய்துள்ளார். ஒரு இளம்பெண் மறந்து போன நினைவுகளிலிருந்து முழுமையான நிகழ்வுகளை கண்டுபிடிக்க முயல்வதை மையமாக வைத்து இந்த வெப் தொடர் உருவாகியுள்ளது.
'ஃபால்' வெப் தொடர் விரைவில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில், இந்த வெப் தொடரின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.