அமெரிக்காவில் களமிறங்கிய அனிருத் - உற்சாக வரவேற்பு
அமெரிக்காவில் அனிருத் இசை நிகழ்ச்சி நடத்துகிறார்.
சென்னை,
தென்னிந்திய சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். கடந்த 2012-ஆம் ஆண்டு நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான 3 திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
இப்படத்தில் இடம்பெற்றிருந்த வொய் திஸ் கொலவெறி பாடல் உலகளவில் வெளியாகி பிரபலமானதை தொடர்ந்து இவர் அடுத்தடுத்து பல திரைப்படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பினை பெற்றார். இவரின் திரைப்பயணத்தில் இவர் பல விருதுகளை பெற்று புகழ்பெற்றுள்ளார். இவர் இசை நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார்.
அதன்படி, தற்போது அமெரிக்காவில் அனிருத் களமிறங்கியுள்ளார். அமெரிக்கா மற்றும் கனடா நாட்டில் அனிருத்தின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்கு முன்பு மலேசியா, சிங்கப்பூர், துபாய், லண்டன் போன்ற நாடுகளில் இவரது இசை நிகழ்ச்சி நடந்தநிலையில், தற்போது அமெரிக்காவில் நடைபெற உள்ளது. இந்த இசை நிகழ்ச்சி நடத்துவதற்காக அமெரிக்காவிலுள்ள சான் பிரான்சிஸ்கோ விமான நிலையத்திற்கு வந்த அனிருத்திற்கு இசை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.