எனக்கு திருமணமா? -நடிகை ரெஜினா
ரெஜினா விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல்கள் பரவின. இதற்கு விளக்கம் அளித்து ரெஜினா அளித்துள்ள பேட்டியில்,
தமிழில் கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தின் மூலம் கவனிக்கப்பட்ட ரெஜினா கசாண்ட்ராவுக்கு நிறைய படங்கள் குவிந்தன. தெலுங்கிலும் அதிக படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். இப்போது 3 தமிழ் படங்களும், 3 தெலுங்கு படங்களும் கைவசம் உள்ளன. ரெஜினா விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல்கள் பரவின. இதற்கு விளக்கம் அளித்து ரெஜினா அளித்துள்ள பேட்டியில், ''2020-ல் எனது காதல் முறிந்துபோனது. அதில் இருந்து விடுபட கொஞ்ச நாட்கள் எடுத்துக்கொண்டேன். இப்போது யாரையும் காதலிக்கவில்லை. திருமணம் பற்றிய பேச்சை எடுக்கவே மாட்டேன். வாழ்க்கையில் திருமணம் செய்து கொள்வேனோ, இல்லையோ என்பது எனக்கே தெரியாது. ஏனென்றால் சிறு வயது முதலே தனது காலில் சுயமாக வாழ்வது எப்படி என்பது பற்றி என் அம்மா என்னை பழக்கப்படுத்தி வைத்துள்ளார். எனவே வாழ்க்கையில் யாராவது வேண்டுமா? வேண்டாமா என்பது குறித்து யோசிக்க மாட்டேன். இப்போதைக்கு நான் செய்த படங்கள் எல்லாமே எனக்கு மிகவும் பிடித்தவை தான்" என்றார்.