'புஷ்பா 2' படத்தின் சண்டை காட்சி கசிவு - வீடியோவை அகற்ற ரசிகர்கள் கோரிக்கை

இதற்கு முன்னதாக, 'புஷ்பா 2' செட்டில் இருந்து மற்றொரு வீடியோவும் கசிந்தது.

Update: 2024-07-31 09:46 GMT

சென்னை,

அல்லு அர்ஜுன் 'புஷ்பா தி ரைஸ்' படத்தின் வெற்றியைத்தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமான 'புஷ்பா 2 தி ரூல்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் டீசரும் அதனைத் தொடர்ந்து பாடல்களும் வெளியாகி வைரலாகின. இந்தப்படம் அடுத்த மாதம் 15-ந் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பாராத சில காரணங்களால் வருகிற டிசம்பர் 6-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்தின் கிளைமாக்ஸ் சண்டை காட்சிகள் இணையத்தில் கசிந்துள்ளன. அதனைத்தொடர்ந்து, வீடியோவை ரசிகர்கள் மற்றும் சமூக ஊடக பயனர்கள் உடனடியாக அகற்றுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதற்கு முன்னதாக, 'புஷ்பா 2' செட்டில் இருந்து மற்றொரு வீடியோவும் கசிந்தது. அதில் ராஷ்மிகா சிவப்பு நிற சேலையில் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த படத்தின் தயாரிப்பு பணிகள் முடியும் தருவாயில் உள்ளதாக கூறப்படுகிறது

Tags:    

மேலும் செய்திகள்