அல்லு அர்ஜுன் பிறந்தநாள்: ஆர்வக் கோளாறில் நடிகர் வீட்டை சேதப்படுத்திய ரசிகர்கள்

அல்லு அர்ஜூன் வீட்டின் சுவர் மீது ஏறி நடிகருக்கு கைக்கொடுப்பதற்கு ரசிகர்கள் முயன்றனர். அப்போது வீட்டின் சுவர் மீது சென்ற கம்பிகளை ஆர்வக் கோளாறில் உடைத்து சேதப்படுத்தினர் ரசிகர்கள்.

Update: 2024-04-08 13:08 GMT

சென்னை,

தற்போது புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் புஷ்பா தி ரைஸ் என்ற தலைப்பில் உருவாகி வருகிறது. படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டீசர் அல்லு அர்ஜுனின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று காலை 11.07 மணி அளவில் வெளியானது.

தென்னிந்தியாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். இவர் நடித்த புஷ்பா திரைப்படம் உலகம் முழுவதும் பெரும் வெற்றியை பெற்றது. இந்நிலையில், நடிகர் அல்லு அர்ஜுன் இன்று தனது 42-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் அல்லு அர்ஜுனை காண அவரது வீட்டின் முன் குவிந்தனர். அப்போது ரசிகர்களை காண அல்லு அர்ஜுன் வீட்டின் வெளியே வந்தார். பின்னர் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது அவரைப் பார்க்கும் ஆர்வத்தில் வீட்டின் சிறுபகுதியை சேதப்படுத்தியுள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் பரவி வைரலாகி உள்ளது.

அல்லு அர்ஜூன் வெளியே வந்ததும் அவரைப் பார்த்து உற்சாகமாகக் கூக்குரலிட்டு தங்கள் வாழ்த்தைத் தெரிவித்து இருந்தனர். அதேபோல, அல்லு அர்ஜூன் வீட்டின் சுவர் மீது ஏறி கைக்கொடுப்பதற்கு முயன்றனர். அப்போது வீட்டின் சுவர் மீது சென்ற கம்பிகளை ஆர்வக் கோளாறில் உடைத்து சேதப்படுத்தினர் ரசிகர்கள். இதுமட்டுமல்லாது, அங்கே ஒரு ரசிகர் கீழே விழப்போனார். இதை எல்லாம் பார்த்த அல்லு அர்ஜூன் அப்செட் ஆனார்.

அல்லு அர்ஜூன் பிறந்தநாளை ஒட்டி 'புஷ்பா2: தி ரூல்' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. ஜாதரா திருவிழாவில் துஷ்டர்களை வதம் செய்யும் விதமாக கையில் சூலம், காலில் சலங்கை என நீல நிற புடவை அணிந்து மிரட்டி இருந்தார் அல்லு அர்ஜூன்.

Tags:    

மேலும் செய்திகள்