புலியே இரண்டடி பின்னால் வச்சா புஷ்பா வந்துட்டான்னு அர்த்தம்...! புஷ்பா-2 புதிய போஸ்டர்

'புஷ்பா: தி ரைஸ்' படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, இதன் தொடர்ச்சி'புஷ்பா: தி ரூல்' மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.;

Update:2023-04-08 12:02 IST

சென்னை

இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் பாசில், ஜகதீஷ், சுனில், ராவ் ரமேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த திரைப்படம் 'புஷ்பா'. இந்த படம் தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டு தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியாகி ரூ.350 கோடி வரை வசூலை ஈட்டியது.

தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகமான 'புஷ்பா-தி ரூல்' படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.நடிகர் அல்லு அர்ஜூன் தன்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு 'புஷ்பா-தி ரூல்' படத்தின் சிறப்பு வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. 3 நிமிடம் 14 நொடிகள் நீளமுள்ள இந்த வீடியோ தற்போது ரசிகர்களை கவர்ந்து இணையத்தில் வைரலாகி உள்ளது.

தற்போது அல்லு அர்ஜுன் புடவை உடுத்தி, தங்க நகைகள் அணிந்த நிலையில், 'புஷ்பா: தி ரூல்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.'புஷ்பா: தி ரூல்' படத்தின் போஸ்டரை நடிகர் டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

'புஷ்பா: தி ரைஸ்' படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, இதன் தொடர்ச்சி'புஷ்பா: தி ரூல்' மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு. புஷ்பாவையும் அவரது உலகத்தையும் அறிமுகப்படுத்தும் மூன்று நிமிட சிறப்பு வீடியோ மூலம் பார்வையாளர்களின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் சுகுமார்.

திருப்பதி சிறையில் இருந்து துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் புஷ்பா தப்பிச் சென்ற செய்தியுடன் வீடியோ தொடங்குகிறது. காடுகளில் புஷ்பாவை வேட்டையாட போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர். புஷ்பாவின் ஆதரவாளர்கள் தெருக்களில் இறங்கி வன்முறையில் ஈடுபடுகின்றனர்.

புஷ்பா ஒரு காட்டில் காணப்பட்டதாக ஒரு சேனலில் பிரேக்கிங் செய்தியுடன் குழப்பமான சூழ்நிலை ஒரு கணம் நிறுத்தப்படுகிறது. புஷ்பா தனது குணாதிசயமான ஸ்வாக்கருடன் நுழையும் போது ஒரு புலி விலகிச் செல்வதை கேமரா காட்சிகள் காட்டுகிறது.

புலியே இரண்டடி பின்னால் வச்சா புஷ்பா வந்துட்டான்னு அர்த்தம்...! 'ரூல் புஷ்பா ' என்ற பஞ்ச் டைலக்குடன் வீடியோ முடிகிறது.

Tags:    

மேலும் செய்திகள்