நடிகை ஆலியா பட்டிற்கு பெண் குழந்தை பிறந்தது...!

இந்தி திரைத்துறையின் பிரபல நடிகர் ரன்பீர் கபூரும், நடிகை ஆலியா பட்டும் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் செய்துகொண்டனர்.

Update: 2022-11-06 07:59 GMT

மும்பை,

இந்தி திரைத்துறையின் உச்ச நட்சத்திரங்களாக திகழ்பவர்கள் நடிகர் ரன்பீர் கபூர், நடிகை ஆலியா பட். இதனிடையே, ரன்பீர் கபூரும், ஆலியா பட்டும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

இதனை தொடர்ந்து காதல் தம்பதிகளான ரன்பீர் மற்றும் ஆலியா கடந்த ஏப்ரல் மாதம் 14-ம் தேதி திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திற்கு பின் கடந்த செப்டம்பர் மாதம் பிரம்மாஸ்திரா திரைப்பட புரொமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட நடிகை ஆலியா பட் பிங் நிற ஆடையணிந்து வந்தார். அந்த ஆடையில், 'குழந்தை உள்ளது' என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருந்தது. இதன் மூல, தான் கருவுற்றிருப்பதை நடிகை ஆலியா பட் சூசகமாக வெளிப்படுத்தி இருந்தார்.

இந்நிலையில், நடிகை ஆலியா பட்டிற்கு இன்று பெண் குழந்தை பிறந்தது. நிறைமாத கர்ப்பிணியான மும்பையில் உள்ள மருத்துவமனையில் ஆலியா பட் இன்று அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.

நடிகர் ரன்பீர் கபூர் - நடிகை ஆலியா பட் தம்பதிக்கு இன்று பெண் குழந்தை பிறந்துள்ள நிலையில் நட்சத்திர தம்பதிக்கு திரைத்துறையினர், ரசிகர்கள் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க... "விரைவில் குழந்தை" ஆடையில் வாசகம்..! பிரபல நடிகையின் செயலால் ரசிகர்கள் அதிர்ச்சி!!

Tags:    

மேலும் செய்திகள்