நிர்வாணமாக போஸ் கொடுத்த நடிகர் ரன்வீர் சிங்கிற்கு ஆதரவாக பிரபல நடிகரின் மனைவி கருத்து!
நடிகர் ரன்வீர்சிங் நிர்வாண படங்கள், கடந்த 21 ஆம் தேதி இணையதளத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.;
மும்பை,
நடிகர் ரன்வீர்சிங் நிர்வாண படங்கள், கடந்த 21 ஆம் தேதி இணையதளத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனையடுத்து, நடிகர் ரன்வீர்சிங் நிர்வாணமாக இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டதற்காக அவர் மீது கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் மும்பை போலீசார் எப்ஐஆர் பதிவு செய்தனர்.
ரன்வீர்சிங் இப்போது நடிகை ஆலியா பட், தர்மேந்திரா, ஷபானா, ஜெயா பச்சான் ஆகியோருடன் சேர்ந்து புதிய படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படம் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது.
இந்நிலையில், நிர்வாணமாக போஸ் கொடுத்த நடிகர் ரன்வீர் சிங்கிற்கு ஆதரவாக நடிகை ஆலியா பட் கருத்து தெரிவித்துள்ளார். இவர் பிரபல நடிகர் ரன்பீர் கபூரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இதனிடையே, "டார்லிங்ஸ்" திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய ஆலியா பட் கூறியதாவது,
"நடிகர் ரன்வீர் சிங்கிற்கு எதிரான எதையும் நான் கேட்க விரும்பவில்லை. அவருக்கு எதிராக பேசப்படும் எந்த கருத்தையும் நான் விரும்பவில்லை. என்னுடைய சக நடிகர் ரன்வீர் மீது வைக்கப்படும் புகார்களை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் மனதளவில் அனைவராலும் விரும்பப்படுபவர். அவர் திரைப்படங்களின் மூலம் நமக்காக நிறைய செய்துள்ளார். நாம் அவருக்கு அன்பை மட்டுமே திருப்பி கொடுக்க வேண்டும்" என்று கூறினார்.