விஜய்யுடன் நடிக்கும் அஜ்மல்

விஜய்யின் 68-வது படத்தில் அஜ்மல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

Update: 2023-10-22 05:12 GMT

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த 'லியோ' படம் உலகம் முழுவதும் திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது. இதனைத்தொடர்ந்து வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளார். இது விஜய்யின் 68-வது படம் ஆகும். இதில் மோகன், ஜெயராம், சினேகா, மீனாட்சி சவுத்ரி, பிரபுதேவா, பிரசாந்த் உள்பட பலர் நடிக்கிறார்கள்.

இது வெங்கட்பிரபு பாணி ஜாலியான படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது. படத்தில் அஜ்மல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக விஜய்யுடன் அவர் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இதை உறுதிப்படுத்தும் வகையில் படப்பிடிப்பு தளத்தில் விஜய்யுடன், அஜ்மல் இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

'அஞ்சாதே', 'கோ', 'மாற்றான்', 'தீர்க்கதரிசி' போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் அஜ்மல் நடித்துள்ளார். இதுதவிர மலையாள, தெலுங்கு படங்களிலும் அஜ்மல் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்