இணையத்தில் வைரலாகும் அஜித்தின் புகைப்படம்.!

நடிகை மஞ்சுவாரியர், அஜித்துடனான புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து 'நீங்கள் நீங்களாகவே இருந்ததற்கு நன்றி அஜித் சார்" என்று பதிவிட்டுள்ளார்

Update: 2023-01-13 15:34 GMT

சென்னை,

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான 'துணிவு' திரைப்படம் நேற்று முன்தினம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் வெளியிட்டது.

வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வரும் துணிவு திரைப்படத்தை ரசிகர்கள், திரையுலகினர் என பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், நடிகை மஞ்சுவாரியர், அஜித்துடனான புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து 'நீங்கள் நீங்களாகவே இருந்ததற்கு நன்றி அஜித் சார்" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்