'குட் பேட் அக்லி' படத்தின் ஓடிடி உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்?

'குட் பேட் அக்லி' திரைப்படத்தின் ஓடிடி உரிமையை ரூ.95 கோடிக்கு கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.;

Update: 2024-05-22 10:00 GMT

சென்னை,

நடிகர் அஜித்குமார் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு விடாமுயற்சி என்று தலைப்பு வைக்கப்பட்டு உள்ளது. நீண்டநாட்களாக கிடப்பில் இருந்த இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதமாக, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அஜித்தின் அடுத்த படம் குறித்த அப்டேட் அண்மையில் வெளியானது. அதன்படி, அஜித் குமார் அடுத்ததாக நடிக்கும் திரைப்படம் குட் பேட் அக்லி. இது அஜித் நடிக்கும் 63-வது திரைப்படமாகும். இத்திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகியது.

இந்த நிலையில், பிரபல ஓடிடி நிறுவனமான நெட்பிளிக்ஸ் 'குட் பேட் அக்லி' திரைப்படத்தின் ஓடிடி உரிமையை ரூ.95 கோடிக்கு கைப்பற்றியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுவே, நடிகர் அஜித் குமார் படங்களிலேயே ஓடிடியில் அதிக தொகைக்கு விற்பனையான படம் என்றும் கூறப்படுகிறது.

இதே நிறுவனம், தற்போது விஜய் நடித்து வரும் 'கோட்' படத்தின் ஓடிடி உரிமையை ரூ. 110 கோடிக்கு வாங்கியதாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்