இந்தியில் தயாராகும் 'கைதி'

கார்த்தியின் கைதி தற்போது இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. இந்த ரீமேக்கில் அஜய் தேவ்கன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.;

Update:2022-06-03 16:02 IST

வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் ஒரு படத்துக்கு வரவேற்பு கிடைப்பது மிகவும் அபூர்வம். இந்த அபூர்வம், கடந்த 2019-ம் ஆண்டில் கார்த்தி நடித்து வெளியான 'கைதி' படத்தில் நிகழ்ந்தது. அந்தப் படத்தை ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரித்தது. லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார்.

கார்த்தியுடன் நரேன், அர்ஜுன்தாஸ், பேபி மோனிகா உள்பட பலர் நடித்து இருந்தார்கள். அதில் கதாநாயகி மற்றும் பாடல்கள் கிடையாது. கார்த்தியின் திரையுலக வாழ்க்கையில், ஒரு மைல் கல்லாக அந்தப் படம் அமைந்தது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய அனைத்து தென்னிந்திய மொழிகளிலும், அமோக வரவேற்பை பெற்றது. ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்தது.

இந்தப்படம் இந்தியில், அஜய்தேவ்கன் நடிக்க 'போலா' என்ற பெயரில் தயாராகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்