சேர்ந்து எடுத்துக்கொண்ட ஐஸ்வர்யா ராய், திரிஷா புகைப்படம் வைரல்

Update:2023-04-27 15:06 IST

மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் நாளை (28-ந் தேதி) திரைக்கு வரும் நிலையில் அதில் நடித்துள்ள விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, சோபிதா துலிபாலா ஆகியோர் பல நகரங்களுக்கு சென்று படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று பேசினர்.

சில தினங்களுக்கு பிறகு ஐஸ்வர்யா ராயும் இந்த குழுவுடன் இணைந்தார். ஐதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று திரிஷாவை பாராட்டி பேசினார். அப்போது ஐஸ்வர்யா ராயுடன் இணைந்து திரிஷா புகைப்படம் எடுத்து அதை தனது வலைத்தள பக்கத்தில் நந்தினி, குந்தவை என்ற பெயர்களை குறிப்பிடும் வகையில் நன், குந் என்று பெயர்களுடன் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் வைரலாகிறது.

நிகழ்ச்சியில் ஜெயம் ரவி பேசும்போது, தான் ஐஸ்வர்யா ராயின் ரசிகன் என்றார். மும்பை நிகழ்ச்சியில் மணிரத்னத்திடம் ஐஸ்வர்யா ராய் உங்களுக்கு அதிர்ஷ்ட நடிகையா என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்து மணிரத்னம் கூறும்போது, "டைரக்டர்கள் சுயநலவாதிகள், ஐஸ்வர்யா ராயை நான் எவ்வளவு நேசித்தாலும் எனது கதாபாத்திரத்துக்கு பொருத்தமாக இருப்பார் என்று தோன்றினால் நடிக்கும்படி கேட்பேன். அவரும் நடிக்க சம்மதித்து விடுவார்'' என்று தெரிவித்தார். உடனே மேடையில் இருந்த ஐஸ்வர்யா ராய் எழுந்து சென்று மணிரத்னம் காலை தொட்டு வணங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்