'டாக்சிக்' படத்தில் இணையும் அஜித் பட நடிகை? - வெளியான தகவல்

'டாக்சிக்' படத்தில் நடிகை ஹூமா குரேஷி இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.;

Update:2024-05-14 12:45 IST

மும்பை,

'கே.ஜி.எப்' படம் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானவர் யஷ். இவர் தற்போது கே.வி.என் புரொடக்சன்ஸ் தயாரிக்கும் 'டாக்சிக்' படத்தில் நடித்து வருகிறார். இது தொடர்பான அறிவிப்பு வீடியோ பலரது கவனத்தை ஈர்த்திருந்தது. அதில் 2025ம் ஆண்டு ஏப்ரல் 10-ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, கோவாவில் போதைப் பொருள் தொழில் நடத்தும் ஒரு கும்பலை மையப்படுத்தி எடுக்கப்படும் ஆக்சன் நிறைந்த படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இப்படத்தில் கரீனா கபூர், யஷின் அக்கா கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக இருந்தது ஆனால், கால்ஷீட் பிரச்சினை காரணமாக கரீனா கபூர் விலகிவிட்டார். அதனைத்தொடர்ந்து யஷின் அக்கா கதாபாத்திரத்தில் நடிக்க நயன்தாராவிடம் பேசி வருகின்றனர்.  இப்படத்தில் நடிக்க நயன்தாரா கூடுதல் சம்பளம் கேட்பதாக தெரிகிறது. இதனால் அந்த கதாபாத்திரத்தில் நடிப்பவர் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

இந்நிலையில், பிரபல நடிகை ஹூமா குரேஷி டாக்சிக் படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஹூமா குரேஷி தமிழில் ரஜினி நடிப்பில் வெளிவந்த காலா, அஜித் நடிப்பில் வெளியான வலிமை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது யஷ் நடிக்கும் டாக்சிக் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  

Tags:    

மேலும் செய்திகள்