ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் அதிக வசூல் செய்த படங்களில் 'ஆதிபுருஷ்' நான்காவது இடத்தில்...!

நேற்று ஒரே நாளில் உலகம் முழுவதும் 'ஆதிபுருஷ்' படம் மாபெரும் வசூல் சாதனை படைத்தது. அதாவது இதுவரை இந்தியாவில் அதிக வசூல் செய்த படங்களில் 'ஆதிபுருஷ்' நான்காவது இடத்தில் உள்ளது.

Update: 2023-06-17 11:37 GMT

சென்னை

இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் ராமாயண கதையை மையமாக வைத்து தயாராகி உள்ளது 'ஆதிபுருஷ்' . இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். பிரம்மாண்டமாக உருவாகி உள்ள இப்படத்தை டி சீரிஸ் மற்றும் ரெட்ரோ பைல்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து உள்ளனர்.

இந்த படம் ஆரம்பத்தில் இருந்தெ விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது.

ஆதிபுருஷ் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. இது தமிழ்நாடு மற்றும் ஆந்திராவின் பல்வேறு இடங்களில் அதிகாலை காட்சிகளையும் திரையிடப்பட்டது. தமிழகத்தில் எதிர்பார்த்த வரவேற்பு இல்லாவிட்டாலும் ஆந்திர மக்கள் படத்தைக் கொண்டாடி வருகின்றனர். நேற்று காலை முதல் திரையரங்குகளில் பட்டாசு வெடித்தும், பால்குடம் ஏற்றியும் கொண்டாடி வருகின்றனர்.

விஎப்எக்ஸ் காட்சிகள் எதிர்பார்த்த அளவு பாசிட்டிவாக இல்லை என ரசிகர்களும் மற்றவர்களும் கூறி வரும் நிலையில் படம் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. ஆனால் தமிழில் நேற்றைய வரவேற்பு எதிர்பார்த்த அளவுக்கு இல்லாவிட்டாலும், சனி,ஞாயிறு நல்ல வரவேற்பு இருக்கும் என கூறப்படுகிறது.

நேற்று ஒரே நாளில் உலகம் முழுவதும் 'ஆதிபுருஷ்' படம் மாபெரும் வசூல் சாதனை படைத்தது. அதாவது இதுவரை இந்தியாவில் அதிக வசூல் செய்த படங்களில் 'ஆதிபுருஷ்' நான்காவது இடத்தில் உள்ளது.

சாட்டிலைட், டிஜிட்டல், மியூசிக் மற்றும் இதர உரிமைகள் மூலம் படம் ரூ.247 கோடி வசூலித்ததாக பாலிவுட் ஹங்காமா தெரிவித்திருந்தது.

இந்திய பாக்ஸ் ஆபிசில் ஆதிபுருஷின் முதல் நாள் வசூல் பின்வருமாறு:-

ஆந்திரா / தெலுங்கானா - ரூ. 39 கோடி

கர்நாடகா - ரூ. 6.50 கோடி

தமிழ்நாடு/கேரளா - ரூ. 2 கோடி

இந்தியாவின் மற்ற பகுதிகள் - ரூ. 40.50 கோடி

இந்தியாவில் மட்டும் மொத்தம் – ரூ. 88 கோடி வசூல் செய்துள்ளது.

ஆதிபுருஷின் வெளிநாட்டு வசூல் இன்னும் வெளிவரவில்லை. ஆனால் ஆரம்ப புள்ளிவிவரங்களைப் பொறுத்தவரை, அவை சுமார் 3 மில்லியன் டாலர்கள் மற்றும் உலகளவில் ரூ.140 கோடிகள் வசூல் செய்து இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்