அரசியலில் குதிக்கும் பிரபல நடிகை ...! எந்த கட்சியில் சேரப்போகிறார் தெரியுமா...?

நடிகர் திரிஷா விரைவில் அரசியலில் நுழையப் போகிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

Update: 2022-08-20 07:11 GMT

சென்னை

தெலுங்கில் 'வர்ஷம்' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகை திரிஷா கிருஷ்ணன், தென்னிந்திய மொழிகளில் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.

2002 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படமான 'மவுனம் பேசியதே' மூலம் தமிழில் திரிஷா கதாநாயகியாக அறிமுகமானார்.

தமிழ் அரசியல் திரில்லர் படமான பரமபதம் விளையாடு படத்தில் கடைசியாக நடித்த நடிகை திரிஷா தற்போது இரண்டு படங்களில் நடித்து வருகிறார்

தற்போது நடிகை திரிஷா மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

அவர் நடித்து வரும் பொன்னியின் செல்வன் முதல் பாகம் மற்றும் சதுரங்க வேட்டை 2 ஆகிய திரைப்படங்கள் முறையே செப்டம்பர் 30 மற்றும் அக்டோபர் 7 ஆகிய தேதிகளில் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது மலையாள படமான ராம்: பார்ட் ஒன் மற்றும் தமிழ் படமான தி ரோடு படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் நிலையில், அவர் விரைவில் அரசியலில் நுழையப் போகிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

நடிகை திரிஷா தனது 39வது வயதில் அரசியல் வாழ்க்கையை தொடங்க விரும்புவதாக கூறப்படுகிறது.திரிஷா காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.ஆனால், இது குறித்து திரிஷா தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்