கோவை ஈஷா மையத்தில் நடிகை சமந்தா...
நடிகை சமந்தா கோவை ஈஷா மையத்தில் நவராத்திரி பூஜையை முன்னிட்டு வழிபாடு செய்தார்.
கோவை,
தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் சமந்தா. இவர் 2017-ம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் ஒரு சில காரணத்தால் விவாகரத்து பெற்று பிரிந்தார். கருத்து வேறுபாடு காரணமாக பிரிவதாக அவர்கள் அறிவித்தாலும், சரியான காரணத்தை வெளிப்படையாக கூறவில்லை.
அதன் பிறகு நாக சைதன்யா தற்போது நடிகை சோபிதா துளிபாலா என்பவரை திருமணம் செய்ய இருக்கிறார். நிச்சயதார்த்தமும் சில மாதங்களுக்கு முன் நடந்து முடிந்தது.
இந்தநிலையில், தெலுங்கானா மாநிலத்தின் மந்திரியான கொண்டா சுரேகா தற்போது அளித்திருக்கும் ஒரு பேட்டியில், சமந்தா - நாக சைதன்யாவின் விவாகரத்து குறித்து சர்ச்சையை கிளப்பி உள்ளார். அதில் 'சமந்தா - நாகா சைதன்யா விவாகரத்துக்கு கே.டி ராமா ராவ் தான் காரணம் என்று கூறியுள்ளார். பின்னர், சமந்தா, நாக சைதன்யா, நாகார்ஜுனா உள்பட பலரும் கண்டனங்களை முன்வைக்கவே மந்திரி கொண்டா சுரேகா மன்னிப்பு கோரியிருந்தார்.
இந்தநிலையில், கோவை ஈஷா மையத்தில் உள்ள லிங்க பைரவி கோயிலில் நவராத்திரி பூஜையை முன்னிட்டு வழிபாடு செய்தார். ஒவ்வொரு வருடமும் இதைப் பழக்கமாக வைத்திருக்கும் சமந்தா தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படத்தினைப் பகிர்ந்து, "நான் உங்களது வார்த்தையை ஏற்றுக்கொள்கிறேன். நன்றி தேவி. அனைவருக்கும் மகிழ்சியான நவராத்தி வாழ்த்துகள்" என்று அதில் பதிவிட்டுள்ளார்.