விஜய்யுடன் நடிக்க ஆசைப்படும் நடிகை கிரித்தி ஷெட்டி
நடிகை கிரித்தி ஷெட்டி விஜய்யுடன் இணைந்து ஜோடியாக நடிக்க ஆசை என்று பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.;
தெலுங்கு சினிமாவில் ஜொலித்து வரும் கதாநாயகிகளில் ஒருவர் கிரித்தி ஷெட்டி. இவர் நடித்த 'தி வாரியர்' திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இதில் இடம்பெறும் 'புல்லட்டு' என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் ஒலித்து வருகிறது.
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற கிரித்தி ஷெட்டியிடம் தென்னிந்திய சினிமாவில் பிடித்த நடிகர்கள் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் அளித்த அவர், "தென்னிந்திய சினிமாவில் பல நடிகர்களை எனக்கு பிடிக்கும். தமிழ் சினிமாவில் விஜய் எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடன் இணைந்து நடிக்க ஆசைப்படுகிறேன். தகுந்த நேரம் வரும்போது அது நடைபெறும் என்று எதிர்பார்க்கிறேன்" என்று கூறினார்.
18 வயதான கிரித்தி ஷெட்டி, தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் வெங்கட் பிரபு இயக்கி வரும் புதிய படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.