நடிகை குஷ்பு பிறந்தநாள் - பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து

நடிகை குஷ்புவின் பிறந்தநாளையொட்டி திரை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், ரசிகர்கள் என அனைவரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.;

Update: 2022-09-29 10:20 GMT

சென்னை,

உலகிலேயே நடிகை ஒருவருக்கு கோயில் கட்டினார்கள் என்றால், அது குஷ்புவுக்கு மட்டும் தான் என்று சொல்ல வேண்டும் அந்த அளவிற்கு ரசிகர்கள் பட்டாளம் என அவருக்கு உண்டு என்றால் மிகையல்ல. இந்தநிலையில் நடிகை குஷ்புவின் 52வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

15 வயதில் பாலிவுட்டில் நடிக்கத் தொடங்கிய குஷ்பு, இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து அசத்தி உள்ளார்.

80' 90'ஸ் கிட்ஸ்களின் கனவு கன்னியாக வலம் வந்த குஷ்பு அன்று போல் இன்றும் அதே இளமையோடும், சுறுசுறுப்போடும் இருப்பது திரை வட்டாரத்திலேயே பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகை குஷ்பு சின்னத்திரை, வெள்ளித்திரை, அரசியல், சமூகவலைதளங்களில் என அனைத்திலும் கலக்கி வருகிறார்.

தனது கணவர் சுந்தர். சி மற்றும் குழந்தைகளுடன் பிறந்தநாளை கொண்டாடி வரும் நடிகை குஷ்புவுக்கு திரை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், ரசிகர்கள் என பலரும் பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். #HBDKhushbu என்ற ஹாஷ்டேக்கும் டிரெண்டாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்