நடிகர் விக்ரம் நலமுடன் இருக்கிறார் - மேலாளர் சூரிய நாராயணன் தகவல்

நடிகர் விக்ரம் நலமுடன் இருக்கிறார் என்று அவரின் மேலாளர் சூரிய நாராயணன் தெரிவித்துள்ளார்.

Update: 2022-07-08 11:17 GMT

சென்னை,

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் விக்ரமுக்கு திடீர் உடல் நலக்குறைவுக்கு ஏற்பட்டுள்ளது. சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் விக்ரமுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில், நடிகர் விக்ரம் உடல்நிலை குறித்து அவரின் மேலாளர் சூரிய நாராயணன் கூறியதாவது:-

நடிகர் விக்ரமுக்கு மாரடைப்பு கிடையாது, லேசான நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நடிகர் விக்ரம் உடல்நிலை குறித்து வதந்திகளை பரப்புவது எங்களுக்கு வேதனை அளிக்கிறது.

நடிகர் விக்ரம் தற்போது நலமுடன் இருக்கிறார். இன்று மாலை அல்லது நாளை காலை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். தொடர்ந்து அவர் ஓய்வில் இருக்க வேண்டுமென மருத்துவர்கள் அறிவுரை கூறியுள்ளனர்.

இவ்வாறு சூரிய நாராயணன் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்