முறை தான் ஒரு முறை உன்னை பார்த்தல் அது வரமே ...! மாற்றுத் திறனாளி ரசிகரை தூக்கி புகைப்படம் எடுத்துக்கொண்ட நடிகர் விஜய்...!

தன்னை சந்திக்க வந்த மாற்றுத் திறனாளி ரசிகர் ஒருவரை தூக்கி நடிகர் விஜய் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

Update: 2022-12-13 12:38 GMT

சென்னை,

விஜய் நடித்துள்ள வாரிசு பொங்கலுக்கு திரைக்கு வரும் என்று அறிவித்து உள்ளனர். இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி உள்ளது. இந்த படத்தை தெலுங்கு டைரக்டர் வம்சி பைடிப்பள்ளி இயக்கி உள்ளார். பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில்ராஜு தயாரித்துள்ளார்.

இந்தநிலையில் விழாக்காலங்களில் நேரடித்தெலுங்குத் திரைப்படங்களுக்கு மட்டுமே ஆந்திரத்தில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெலுங்குத் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து, கடந்த நவம்பர் மாதம் முதல்கட்டமாக நடிகர் விஜய் தனது ரசிகர்களை சென்னை பனையூரில் விஜய் மக்கள் மன்றம் அலுவலகத்தில் நடிகர் விஜய் சந்தித்தார். அதில், நாமக்கல், சேலம், புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகிகளை சந்தித்தார்.

இந்நிலையில், இரண்டாவது கட்டமாக இன்று செங்கல்பட்டு, அரியலூர், கடலூர், திண்டுக்கல் மாவட்டங்களின் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்தார். இவர்களுக்கு மதிய உணவாக மட்டன் பிரியாணி வழங்கப்பட்டது.

ரசிகர்களை சந்திக்க கருப்பு நிற உடையில், புதிய ஹேர்ஸ்டைலுடன் வந்த விஜய்யை பார்த்த ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். அப்போது அங்கு வந்த மாற்றுத்திறனாளி ரசிகர் ஒருவரை நடிகர் விஜய் தன் கைகளால் தூக்கி புகைப்படம் எடுத்துக்கொண்டார். தற்போது, இது வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்