நடிகர் சஞ்சய்தத் பகிர்ந்த புற்று நோய் பாதிப்பு அனுபவம்

நடிகர் சஞ்சய்தத் புற்றுநோயில் சிக்கிய ஆரம்பகால நினைவுகளை பகிர்ந்துள்ளார்.

Update: 2023-01-14 03:34 GMT

இந்தி திரையுலகில் முன்னணி கதாநாயகனாக இருந்த சஞ்சய்தத் தற்போது குணச்சித்திர வேடங்களிலும், வில்லன் கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். கே.ஜி.எப். படத்தில் சஞ்சய்தத்தின் வில்லத்தனமான வேடம் பேசப்பட்டது. ஏற்கனவே சஞ்சய்தத்துக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சைக்குப்பின் குணமடைந்தார். இந்தநிலையில் புற்றுநோயில் சிக்கிய ஆரம்பகால நினைவுகளை சஞ்சய்தத் பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், ''எனக்கு முதுகுவலி ஏற்பட்டது. சுவாசிக்கவும் கஷ்டப்பட்டேன். இதையடுத்து ஆஸ்பத்திரி யில் அனுமதித்தனர். அப்போது எனக்கு புற்றுநோய் பாதிப்பு இருக்கும் விஷயத்தை யாரும் தெரிவிக்கவில்லை. எனது மனைவியோ, குடும்பத்தினரோ அப்போது அருகில் இல்லை. நான் தனியாகத்தான் இருந்தேன். திடீரென்று ஒருவர் வந்து உங்களுக்கு புற்றுநோய் இருக்கிறது என்றார்.

புற்றுநோய்க்கு சிகிச்சை எடுத்துக்கொள்ள கூடாது என்பதுதான் எனது முதல் எதிர்வினையாக இருந்தது. ஏற்கனவே எனது அம்மாவும், மனைவியும் புற்றுநோய் பாதிப்பினால் இறந்தனர். எனவே புற்றுநோய்க்கு கீமோதெரபி சிகிச்சை எடுத்துக்கொள்வதைவிட இறந்துவிட விரும்பினேன். எனவே எனக்கு கீமோதெரபி சிகிச்சை தேவையில்லை. நான் சாவதாக இருந்தால் செத்துவிடுகிறேன் என்றேன். பிறகு எனது குடும்பத்தினர் எனக்கு ஆதரவாக வந்தனர்'' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்