படப்பிடிப்பிற்காக கன்னியாகுமரி சென்ற நடிகர் ரஜினிகாந்த்

இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'வேட்டையன்'.;

Update:2023-12-26 16:24 IST

சென்னை,

இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'வேட்டையன்'. இந்த படத்தில் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்கிறார். மேலும், இந்த படத்தில் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், ராணா டகுபதி, பகத் பாசில் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

'வேட்டையன்' படத்தின் தலைப்பு மற்றும் டீசர் ரஜினியின் பிறந்தநாள் அன்று வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் கன்னியாகுமரி சென்றுள்ளார். 'வேட்டையன்' படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரியில் நடைபெற உள்ளதால் அவர் அங்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து வெளியே வரும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்