'மஞ்சும்மல் பாய்ஸ்' படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டிய நடிகர் ரஜினிகாந்த்

கொடைக்கானலில் உள்ள குணா குகையில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை மையமாக எடுக்கப்பட்ட திரைப்படம் தான் மஞ்சும்மல் பாய்ஸ்.

Update: 2024-03-30 06:10 GMT

சென்னை,

கொடைக்கானலில் உள்ள குணா குகையில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை மையமாக எடுக்கப்பட்ட திரைப்படம் தான் மஞ்சும்மல் பாய்ஸ். மலையாளத்தில் கடந்த பிப்ரவரி 22-ம் தேதி அன்று மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் வெளியானது.

இயக்குனர் சிதம்பரம் இயக்கிய இந்த படத்தில் ஸ்ரீநாத் பாஸி, சௌபின் சாஹிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் வெளியாகி தமிழ், மலையாளம் என இருதரப்பு ரசிகர்களிடமும் பாராட்டுகளைப் பெற்றது. மேலும், வசூல் ரீதியாகவும் "மஞ்சும்மல் பாய்ஸ்" வெற்றி பெற்றது.

மஞ்சும்மல் பாய்ஸ், படம் உலகம் முழுவதும் 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து, அந்த மைல்கல்லை எட்டிய முதல் மலையாளப் படம் என்ற பெருமையைப் பெற்றது. தமிழ் சினிமா பிரபலங்களும் மஞ்சும்மல் பாய்ஸை கொண்டாடத் தவறவில்லை. படத்தைப் பார்த்த நடிகர்கள் கமல்ஹாசன், தனுஷ், விக்ரம் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டினர்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் மஞ்சும்மல் பாய்ஸ் படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டி உள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்