நடிகர் பிரதாப் போத்தன் கடைசியாக பதிவிட்ட உருக்கமான பேஸ்புக் பதிவு..காதல்.. அன்பு.. மரணம்..
மரணம் அடைவதற்கு முன்பு கூட பிரதாப் போத்தன் காதல்.. வாழ்க்கை.. மரணம் குறித்துபேசி இருப்பது சினிமா ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை,
தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகில் சிறந்த நடிகராகவும், சிறந்த இயக்குனராகவும் இருந்து வரும் பிரதாப் போதன் தமிழில் பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
மலையாள திரைப்படங்களின் மூலம் அறிமுகமாகி நடித்துக் கொண்டிருந்த பிரதாப் போத்தன் தமிழில் இயக்குனர் பாலுமகேந்திரா இயக்கிய "அழியாத கோலங்கள்" திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு நடிகராக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகனாகவும், வில்லனாகவும் நடித்து நம் அனைவரையும் ரசிக்க வைத்து வந்த பிரதாப் போத்தன் தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பல வெற்றித் திரைப்படங்களை இயக்கியும் உள்ளார்.
மீண்டும் ஒரு காதல் கதை என்ற தமிழ் படத்தை இயக்கி நடித்ததுடன் ஜீவா, வெற்றிவிழா, மைடியர் மார்த்தாண்டன், சீவலப்பேரி பாண்டி மற்றும் லக்கிமேன் உள்ளிட்ட பல வெற்றித் திரைப்படங்களை தமிழில் இயக்கி சிறந்த இயக்குனராகவும் தமிழ் மக்களிடையே பிரபலமானார்.
ல சினிமா பிரபலங்கள் இவரின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். அவரின் திடீர் மரணம் ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் பிரதாப் போத்தன் நேற்று பேஸ்புக்கில் வெளியிட்ட சில பதிவுகள் இணையம் முழுக்க தீயாக பரவி வருகிறது.
இன்று அவர் மரணம் அடைந்த நிலையில் நேற்று தான் காதல்.. அன்பு.. மரணம்.. வாழ்க்கை என்று பல விஷயங்களை பற்றி போஸ்ட் செய்து இருக்கிறார். நேற்று ஒரே நாளில் பல ஆழ்ந்த கருத்துக்களை பதிவிட்ட பிரதாப் போத்தன் இன்று காலமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நெட்டிசன்கள் பலர் இதை ஷேர் செய்து வருகிறார்கள்.
பிரதாப் போத்தன் நேற்று பேஸ்புக் போஸ்ட் ஒன்றில், சிலர் அதிகமாக அக்கறை காட்டுவார்கள். என்னை பொறுத்தவரை அதை காதல் என்பேன் என்று ஏஏ மில்னே என்பவற்றின் வரிகளை குறிப்பிட்டு இருக்கிறார். இன்னொரு போஸ்டில் ஜார்ஜ் கார்களின் என்பவரின் வரிகளை பகிர்ந்து இருக்கிறார். மரணம் என்பது நாம் தினமும் எச்சில் விழுங்குவதால் ஏற்படுகிறது என்று அதில் பிரதாப் போத்தன் குறிப்பிட்டுள்ளார்.
மரணம் அடைவதற்கு முன்பு கூட பிரதாப் போத்தன் காதல்.. வாழ்க்கை.. மரணம் குறித்துபேசி இருப்பது சினிமா ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.