பிரபல நடிகையுடன் ஓட்டலில் தங்கி இருந்த நடிகர்...! கண்டுபிடித்து செருப்பால் அடிக்கவந்த 3-வது மனைவி

நரேஷ் மற்றும் பவித்ரா சில காலமாக ஒன்றாக வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. நடிகரின் குடும்ப நிகழ்ச்சிகள் அனைத்திலும் நடிகை கலந்து கொண்டுள்ளார்.;

Update: 2022-07-04 06:17 GMT

மைசூரு

பிரபல தென்னிந்திய அம்மா நடிகை பவித்ரா லோகேஷ். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிப் படங்களில் குணச்சித்திர நடிகையாக நடித்து உள்ளார்.

இவர் மைசூரில் உள்ள ஒரு ஓட்டலில் நடிகர் நரேசுடன் தங்கி இருந்தார். அவர்கள் ஓட்டலில் தங்கியிருப்பது நரேஷின் மூன்றாவது மனைவி ரம்யாவுக்கு தெரியவந்தது.

இதை தொடர்ந்து அவர் அங்கு வந்தார். அங்கு பவித்ராவையும், நரேஷையும் பார்த்து சண்டை போட்டார். பவித்ராவை செருப்பால் அடிக்க முயன்றார். அங்கு பாதுகாப்புக்கு வந்த போலீசார் ரம்யாவை தடுத்து நிறுத்தினர்.

ரம்யாவைப் பார்த்தது விசில் அடித்துவிட்டு பவித்ராவுடன் காரில் கிளம்பி சென்றார் நரேஷ். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

முன் கதை...!


நரேஷ் மற்றும் பவித்ரா சில காலமாக ஒன்றாக வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. நடிகரின் குடும்ப நிகழ்ச்சிகள் அனைத்திலும் நடிகை கலந்து கொண்டுள்ளார். முறையாக இல்லாவிட்டாலும், பவித்ராவும் அவரது கணவர் சுசேந்திர பிரசாமும் விவாகரத்து பெற்றதாக கூறப்படுகிறது. 2007 இல், இந்த ஜோடி திருமணம் செய்து கொண்டது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் நரேஷ் மற்றும் நடிகை பவித்ரா லோகேஷ் திருமணம் செய்து கொண்டனர் தன்னை விவாகரத்து செய்யாமல் வேறொரு திருமணத்திற்கு ஏற்பாடு செய்ததாக நரேஷின் 3 வது மனைவி ரம்யா குற்றம் சாட்டினார். மேஜை மீது துப்பாக்கியை வைத்து நரேஷை மிரட்டியதாக தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து நரேஷ் கூறும் போது :

ரம்யா மனைவி போல் நடந்து கொண்டதில்லை. பணத்துக்காகத்தான் ரம்யா பிளாக்மெயிலில் ஈடுபட்டார். ஐதராபாத்திலும் அப்படித்தான் செய்தார். இருநூறு படங்களில் நடித்துள்ளேன். என்னுடன் நூற்றுக்கும் மேற்பட்ட ஹீரோயின்கள் நடித்திருக்கிறார்கள். ஒரு பெண்ணைக்கூட ஏமாற்றியதாக கேட்டதுண்டா. சித்ரவதை தாங்க முடியாமல் ரம்யா ரூ.10 லட்சம் கொடுத்தேன் என கூறினார். 


Tags:    

மேலும் செய்திகள்